காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீது , குஜராத் முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க, எம்.எல்.ஏ.,வுமான பூர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து ராகுலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் உத்தரவிட்டது. தனக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 4ஆம் தேதி ராகுல் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம், ராகுலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடியால் ராகுலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More