ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை ஒத்தி வைத்து விட்டு கட்சி தலைமை பதவிக்கான வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற காங்கிரஸ் மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சசி தரூர், அசோக் கெலாட், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கான களத்தில் இறங்க கூடும் என கூறப்பட்டு வருகிறது