மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி., சுஷில் குமார் மோடி சார்பில் பீகார் மாநிலம் பாட்னா கீழமை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என பாட்னா கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.அதேநேரத்தில் பாட்னா கீழமை நீதிமன்றத்தின் இந்த சம்மனுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கின் விசாரணைக்கு மே 16 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More