பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது,3 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கலாம். இதனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில்; வைக்கப்பட்டது.இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம்,இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி; கோடை விடுமுறைக்கு பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More