Mnadu News

ராக்கெட் வேகத்தில் இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர் மோடி,முன்பு அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது கடினமாக இருந்தது.விண்ணப்ப படிவம் வாங்கவே நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். தற்போது,அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளன. குரூப் சி மற்றும் டி பிரிவுகளுக்கு நேர்முகத்தேர்வு நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தின் கொள்கையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகும். கடந்த 9 ஆண்டுகளில், இதற்காக மத்திய அரசு மூலதன செலவாக 34 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ராக்கெட் வேகத்தில் இந்தியா வளர்ந்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் புதிய துறைகள் வளர்ந்து வருகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கவே ரோஜர் மேளா. தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி. ஊழலில் ஈடுபடுபவர்கள் வேரறுக்கப்பட்டு வருகின்றனர். வளர்ச்சியை நோக்கி இந்தியா பணியாற்றி வருகிறது. புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் கிலோ மீட்டர், தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன என்று பேசி உள்ளார்.

Share this post with your friends