Mnadu News

ராக் ஸ்டார் அனிருத் – நடிகர் விஜய் கூட்டணியில் தொடரும் மேஜிக்! நா ரெடி பாடல் தொட்ட புதிய உச்சம்!

தளபதி விஜய் நடிகராக உருவாகி வந்த காலகட்டம் முதல் விஜய்யின் படங்களில் பாடல்களுக்கு முக்கியதுவம் கொடுப்பது உண்டு. அதுவும் பல பாடல்களை ஆரம்பம் முதல் அவரே பாடியும் வந்துள்ளார். அப்படி அவர் குரலில் பதிவாகும் பாடல்கள் அது என இசையமைப்பாளராக இருந்தாலும் அது கண்டிப்பாக ஹிட் அடித்து விடும்.

பாடல்கள், நடனம், ஆக்ஷன் என இவை மூன்றும் நிச்சயம் விஜய் படங்களில் பிரதான இடத்தை பிடிக்கும். குறிப்பாக அண்மை காலமாகவே விஜய் தான் நடிக்கும் படத்தில் நிச்சயம் ஒரு பாடலை பாடி விடுகிறார், அதுவும் வைரல் ஹிட் அடித்து விடுகிறது.

அப்படி கடந்த பத்து வருடங்களில் பல ஹிட் பாடல்கள் விஜய் குரலில் பதிவாகி உள்ளன. ஜில்லா படத்தில் கண்டாங்கி, கத்தி படத்தில் SELFIE புள்ள, பிகில் படத்தில் இருந்து வெறித்தனம், மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி, பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா, வாரிசு படத்தில் ரஞ்சிதமே போன்ற இவை அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாகும்.

இதில் குறிப்பாக சொல்ல வேண்டியது என்னவென்றால் அனிருத் விஜய் இணைந்தால் அது இன்னும் கூடுதல் சிறப்பாக அமைவது உறுதி. ஆம், SELFIE புள்ள, குட்டி ஸ்டோரி, ஜாலியோ ஜிம்கானா இந்த மூன்று வெற்றி பாடல்களின் வரிசையில் நான்காவதாக தற்போது வைரல் சென்சேஷசன் ஆன பாடல் தான் “நா ரெடி”, விஷ்ணு எடவன் வரிகளில், அனிருத், விஜய் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர். தற்போது இப்பாடல் 100 மில்லியன் YOUTUBE பார்வைகளை தொட்டுள்ளது.

இதை கொண்டாடும் விதமாக படத்தின் இசை உரிமையை கைபற்றி இருக்கும் சோனி இசை நிறுவனம், பல ரசிகர்களின் வீடியோக்களை ஒன்றாக கோர்த்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது.

Share this post with your friends