Mnadu News

ராஜஸ்தானில் லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு: நாட்டின் 80சதவீதம் தேவையை பூர்த்தி செய்யும்.

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு – காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் என்ற தாது பொருள் இருப்பது தொல்லியல் துறை ஆய்வில் தெரியவந்தது. இதனை மத்திய அரசும் உறுதி செய்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் நாகப்பூர் மாவட்டத்தில் லித்தியம் இருப்பது தெரியவந்துள்ளது. இது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருப்பதை விட பல மடங்கு அதிகம் என்றும் நாட்டின் 80 சதவீதம் லித்தியம் தேவையை இது நிவர்த்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா, லித்தியத்திற்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Share this post with your friends