கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கர்நாடக முதல் அமைச்சராக சித்தராமையாவும் துணை முதல அமைச்சராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் மே 20 ஆம் தேதி அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூரு வரும் ராகுல் காந்தி மே 21 அன்று தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளார்.ஸ்ரீபெரும்புதூரில் தனது தந்தையும் மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தியின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More