அருணாசலில் சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற பகுதியிலிருந்து 5 வீரர்களுடன் அதிநவீன இலகுரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த ஹெலிகாப்டர், நேற்று காலை 10.43 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் தேடப்பட்டு வந்தது..இந்நிலையில், இன்று காலை அந்த ராணுவ வீரரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More