ராமநாதபுரத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 20ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை மாா்ச் 28-ம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களை திரும்பப் பெற மாா்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் எம்.பி.தர்மர், பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.