ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2ஆயிரத்து500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நள்ளிரவு கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
அதே சமயம்;, தங்கச்சிமடம் அடுத்துள்ள நாலுபனை கிராமத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த கிளின்டன், பேதுரு, வினிஸ்டன், தயான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டுச் சென்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்பைடயினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More