ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ராமேஸ்வரத்தில் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்துக்கு சமமானது.
அதே சமயம், ராமேஸ்வரத்தில் உள்ளே, வெளியே 64 தீர்த்தங்கள் உள்ளது. அக்னி தீர்த்தம் கோயில் வெளியே உள்ள கடலை குறிப்பதாகவும் , அத்தகைய சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் புனித நீராட வருகிறார்களா அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ,ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். பின்னர்ட,நகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை செயலர், மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் ஆகியோருக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More