Mnadu News

ராம் – நிவின் பாலி கூட்டணியில் உருவாகி உள்ள படம்! நாளை படத்தின் டைடல் வெளியீடு!

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என பல தரமான,
எதார்த்தமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ராம். இவர் இயக்கும் படம் என்றால் அதில் நிச்சயம் ஒரு இயல்பு, கவித்துவமான காட்சி, பாடல்கள் ஆகியவை இருக்கும்.

ராம், யுவன், முத்துகுமார் காம்பினேஷன் ஒரு முக்கிய கூட்டணியாக பார்க்கப்பட்டது. இவர்களிடம் இருந்து ஒரு படைப்பு வருகிறது என்றால் அது அனைவரது மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைந்து விடும்.

ராம், யுவன் கூட்டணியில், நிவின் பாலி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. ரயில் பயணங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது . மாநாடு வெற்றி பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் டைடல் நாளை வெளியாகிறது.

Share this post with your friends