கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என இயல்பான நெஞ்சுக்கு நெருக்கமான திரைக்கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநர் ராம் தமிழ் சினிமாவின் தனி அடையாளம்.
ராம் படத்தின் காட்சிகளும், பாடல்களும் காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அதுவும் யுவன் நா.முத்துக்குமார் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் இதயத்தை கடத்தி செல்லும்.
பல வருடங்களுக்கு பிறகு ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது. இன்று இப்படத்தின் தலைப்பு “ஏழு மலை ஏழு கடல்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
லிங்க் : https://youtu.be/8s917ufc75k