Mnadu News

ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! எந்த இடத்தில் நடந்துள்ளது தெரியுமா?

தெற்கு சாண்ட்வீச் தீவில் பகுதியில் அமைந்துள்ளது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல். இந்த தீவில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறுகையில் “இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என பதிவு செய்துள்ளது . தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் நிலநடுக்கம் தொடர்ச்சியாக விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து எந்த விபரமும் வெளியாக வில்லை.

Share this post with your friends