இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று காலை ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் அரங்கிற்கு வந்தனர்.
அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.