பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை அறிக்கையில்,கடன் பத்திர வெளியீடு மூலம் 200 கோடி டாலர் அதாவா சுமார் 16ஆயிரத்து 444 கோடி ரூபாய் நிதி திரட்ட வங்கி பரிசீலித்து வருகிறது. இதற்கு வங்கியின் நிர்வாக வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.ஒரே தடவையாகவோ, பல கட்டங்களாகவோ இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். பொது மற்றும் தனி வெளியீடு மூலம் அமெரிக்க டாலர்களிலோ, அல்லது மாற்றத்தக்க பிற நாணயங்களிலோ அந்தக் கடன் பத்திரங்களின் மதிப்பு இருக்கும்.இந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு மார்ச்சில் நிறைவடையும் நடப்பு நிதியாண்டுக்குள் இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More