சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை, முதல் தலைமுறை அரசியல்வாதி ஆக உள்ளதால் மாதம் 8 லட்ச ரூபாய் செலவாகிறது. அதனை கூட என்னால் சமாளிக்க முடியவில்லை. என் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் ஆகியவற்றை நண்பர்கள் தான் தருகின்றனர். போலீஸ் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரபேல் வாட்ச்சை வாங்கியதாக தி.மு.க.,வினர் அவதூறு பரப்புகின்றனர் என்றார்.அதைத் தொடர்ந்து, ரபேல் வாட்ச்சை வாங்கியதற்கான ஒரிஜினல் ‘பில்’ ஐ வெளியிட்டு தொடர்ந்து பேசியுள்ள அண்ணாமலை உலகளவில் 500 ரபேல் வாட்ச்சுகள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 147 வது வாட்ச் என்னிடம் உள்ளது. இந்த வாட்ச்சை, சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்ச ரூபாய்க்கு வாங்கினேன்.இந்தியாவில் 2 வாட்ச் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. அதில் ஒன்றை நான் வைத்துள்ளேன். ஒன்று மும்பையை சேர்ந்தவர் வாங்கினார். மற்றொன்றை கோவையை சேர்ந்த ஜிம்சன் என்று நிறுவனம் வாங்கியது. 2021 மார்ச் மாதம், கேரளாவின் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் அந்த வாட்சை வாங்கி, மே மாதம் என்னிடம் கொடுத்தார். இதற்கான ஒரிஜினல் ‘பில்’ என்னிடம் உள்ளது.ஒரே வாட்ச்சை இரண்டு ஆண்டுகளாக கட்டி கொண்டு உள்ளேன். 2021 முதல் எனது கையில் இருக்கும் ஒரே வாட்ச் இதுதான். நான் காவல் பணியில் இருந்த போது லஞ்சமாக, ரபேல் வாட்சை வாங்கவில்லை. எனது வங்கிக்கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிட உள்ளேன். என்று அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More