Mnadu News

ரேஷன் பருப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீP சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் தேசிய வேளான் விற்பனை கூட்டமைப்புடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த கேந்திரிய பந்தர் என்ற நிறுவனத்துக்கு தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள் ஒப்பந்தம் வழங்கியது.
தேசிய வேளாண் பொருள் விற்பனை கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் நிறுவனங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சப்ளை செய்த பருப்பை ஆய்வு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கிட்டங்கிகளில் உள்ள பருப்பின் மாதிரிகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் தரப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More