பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் கூட்டணியில் வெளியாகி ரெகார்ட் பிரேக்கிங் கலெக்சன் அள்ளி வரும் படம் லவ் டுடே.

சென்ற வாரம் வெளியான இப்படம் வெறும் ஒரு வாரத்திலேயே ₹40 கோடிகளை வசூல் செய்துள்ளது. அது மட்டுமின்றி தெலுங்கில் டப்பிங் செய்ய ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பெரும் தொகைக்கு வாங்கி உள்ளார்.

இன்னும் இந்த படம் ஒரு வாரம் தமிழில் ஓடினால் ₹100 கோடி வசூலை எளிதாக எட்டி விடும் என திரை அரங்கு ஓனர்கள் கருதுகின்றனர். அதோடு, பிரதீப் அடுத்த படத்தை மீண்டும் ஏ ஜி எஸ் நிறுவனத்துக்கே இயக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இதில் ஜெயம் ரவி ஹீரோ என்றும் உறுதி ஆகி உள்ளது.

அதோடு, பிரதீப் சோலோ ஹீரோவாக நடிக்க தயார் என்று கூறியுள்ள நிலையில், தற்போது அவர் நடிக்க ஆஃபர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
