Mnadu News

லவ் டுடே குழு கொடுத்த அடுத்த இரண்டு சர்ப்ரைஸ்கள்!

பெரிய அளவில் புரொமோஷன் இல்லாமல் வெறும் ₹10 கோடிகளில் எடுக்கப்பட்டு தற்போது ₹50 கோடிகளை நெருங்க உள்ளது “லவ் டுடே” திரைப்படம்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து, வசனம் எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார். இவானா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா, ராதிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்.

தற்கால சமூகத்தின் காதலை மையமாக கொண்டு கதை அமைத்து அதில் வென்றுள்ளார் பிரதீப். தற்போது இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கி உள்ளார். விரைவில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது யுவன் வெர்ஷன் இல் “என்னை விட்டு” பாடல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.

சாங் லிங்க்: https://youtu.be/rVwZkT-cg64

Share this post with your friends