2019 ஆம் ஆண்டு வேல்ஸ் குழுமம் தயாரிப்பில் ஜெயம் ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருந்தார்கள். முதல் படமே இயக்குனரான
பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் புகழை எட்டி தந்தது. அதே போல பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது.
இந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் “லவ் டுடே” படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து உள்ளார். இவரோடு இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் என அனைத்தும் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் “பச்சை இலை” என்ற டிரெண்டி நம்பர் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லவ் டுடே விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

லிங்க் : https://youtu.be/82E3iLz2y-M