Mnadu News

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வில் தமன்னா வாங்கிய சம்பளம் இவ்வளவா?

நடிகை தமன்னா தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலில் நடித்த படம் தான் “கேடி”. ‘கேடி’-க்கு பிறகு ஹீரோயினாக நடித்த “கல்லூரி” திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை அள்ளித் தந்தது. தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்தார் மற்றும் வருகிறார். 

அதிலும் தற்போது ஜெயிலர் படத்தில் வெளியான “காவாலா” பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் நிலையில், தமன்னாவின் மார்கெட் எங்கோ சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், காவாலா பாடலுக்கு பிறகு தற்போது வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். 

மேலும், தமன்னா நடிப்பில் தமிழில் ஜெயிலர், தெலுங்கில் தட் இஸ் மகாலக்ஷ்மி, போலா ஷங்கர், ஹிந்தியில் போலே சுடியான், லஸ்ட் ஸ்டோரீஸ் 2,  மலையாளத்தில் பந்த்ரா என ஆறு படங்கள் லைன் அப்பில் உள்ளன. இதில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2, கடந்த ஜூன் 29-ஆம் தேதி பிரபல OTT தளமான “நெட்ஃப்ளிக்ஸ்” இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை தமன்னா ₹7 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Share this post with your friends