காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா சிலையின் கைகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்தூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து நாகல்கேனி சென்ற கண்டெய்னர் லாரி மின்சார வயர் மீது உரசியதும், அந்த வயர் அண்ணா சிலை மீது உரசியதும் இதனால் அண்ணா சிலையின் கை உடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் வெள்ளத்துரையை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இன்றைய தினம் அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி உள்ள நிலையில் இவ்வாறு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More