மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கூட்டணி லியோவில் இணைந்தது. மேலும், பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உட்பட திரளான நட்சத்திரங்கள் குவிந்து உள்ள லியோ மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது.
தளபதி விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்த முதல் படமான “மாஸ்டர்” பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் நிச்சயம் மீண்டும் இன்னொரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் நண்பா என விஜய் அப்போதே கூறி விட்டார். பின்னர் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் மீண்டும் இணைந்து அதகளம் செய்துள்ள படம் “லியோ”. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷின் படங்கள் அனைத்துமே
மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் “லியோ” படத்துக்கு இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், படத்தின் ரிலீஸ் மற்றும் டீஸர், டைடல் என அனைத்தையுமே படக்குழு முன்னமே அறிவித்து ரசிகர்களை மிரள வைத்தனர்.
கடந்த ஜனவரியில் தொடங்கிய “லியோ” ஷூட்டிங்கை வேகமாக நடத்தி வந்தார் லோகேஷ் கனகராஜ். முதல் 60 நாட்கள் வரை காஷ்மீரில் நடைபெற்ற லியோ படப்பிடிப்பு, அடுத்து சென்னை, ஆந்திராவின் தலக்கோனா பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில் லியோ ஷூட்டிங் முழுதும் நிறைவடைந்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் தமது உதவி இயக்குனர்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு 125 நாட்கள், 6 மாதங்கள் என குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.
மேலும், லியோ படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள லோகேஷ், இந்த பயணம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இதனை ஒருபோதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ்ஜின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்து லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.