லைக்கா நிறுவனம் இந்த வருடம் மட்டுமே ரத்தம் ரணம் ரௌத்திரம், டான், பொன்னியின் செல்வன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். இதனால் லைக்கா நிறுவனம் புதிய படங்களை பெரிய நடிகர்களோடு ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
தற்பொழுது, ரஜனிகாந்த் உடன் இரண்டு படங்களையும், அஜித் உடன் ஒரு படத்தையும், சில சிறு பட்ஜெட் தயாரிப்புகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் இன் இரண்டு படங்களில் ஒன்று சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இதற்காக அவருக்கு 3 கோடி சம்பளம் கொடுப்பட உள்ளது. இன்னொரு படத்தை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்க போவது உறுதியாகி உள்ளது. இதில் ரஜினி ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே வர போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக கொண்டு வர முயற்சி நடைபெற்றது ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அது ட்ராப் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதர்வா நடிக்க போவது உறுதியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு வரும் 5 தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.