மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக பார்க்கப்படுவதே அவரின் ஸ்கிரீன் பிளே திறனும், அதிகம் பேசாத குணமும். படத்துக்கு படம் தன்னை செதுக்கி கொண்டே செல்கிறார். தற்போது தமது ஐந்தாவது படத்தை இயக்கி வருகிறார். அது தான் “லியோ”. இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இன்னும் 60 நாட்களில் இப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்து கதைகளை கூறி பல நடிகர்களின் கால் சீட்டை தன்வசம் ஆக்கி உள்ளார்.
ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, கார்த்தி, சூரியா, பிரித்தீவிராஜ் என பலரும் இவரின் ஒரு சொல்லுக்கு காத்திருக்கின்றனர். தலைவர் 171 படத்தை லோகேஷ் எடுப்பது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது. அதே போல கைதி 2 எடுப்பதும் உறுதியாகி உள்ளது. ஆனால், எதை முதலில் எடுக்க போகிறார் என்கிற முடிச்சு தற்போது அவிழ்ந்துள்ளது.
ஆம், அண்மையில் ஒரு சூப்பர் டுவிஸ்ட் நடந்துள்ளது. அது என்னவென்றால் நடிகர் சூரியா தான் லோகேஷ் இயக்க போகிற அடுத்த ஹீரோ, அதாவது சூரியாவிடம் லோகேஷ் இரண்டு கதைகளை கூறி உள்ளதாகவும் அதில் ரோலெக்ஸ் கதையை தற்போது இயக்கலாம் என்று கூறி உள்ளாராம். அது நமக்கு தெரிந்த கதை. இப்படம் தலைவர் 171 ரிலீஸ் ஆன பிறகு துவங்கப்படும் என தெரிய வந்துள்ளது. ஆனால், தலைவர் 171 முடியவே அடுத்த வருடம் இறுதியாகி விடும் என்றும், 2025 இல் தான் சூரியாவின் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது முடிந்தவுடன் தான், 2025 ஆம் ஆண்டு இறுதியில் கைதி 2 துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களையுமே எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.