Mnadu News

வங்காள தேசத்தை புரட்டிப் போட்ட சிட்ரங் சூறாவளி! கள நிலவரம் என்ன?

சிட்ரங் சூறாவளி புயல் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு கரையை கடந்தது. சூறாவளியால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசிய நிலையில், இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை இன்னும் அதிகரித்தது. இதன் காரணமாக அசாம் உள்பட 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், திரிபுராவில் புயலால், இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. மக்கள் தேவையின்றி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் வேண்டுகோளும் விடுத்தார்.

அசாமில்  83 கிராமங்களை சேர்ந்த 1,146 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.

இதனால் கலியாபோர், பாமுனி, சக்முதியா தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அதோடு, மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சூறாவளியால் ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து 325.501 ஹெக்டேர் விளை நிலங்களும் முற்றிலும் சேதத்தை சந்தித்துள்ளன.

எனினும் உயிரிழப்பு, காயங்கள் உள்ளிட்டவை ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடல் அலைகள் பெரும் உயரத்தில் எழும்புவதால் சுற்றுலாவாசிகள், உள்ளூர் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என நகர நிர்வாகம் அறிவிக்கை விடுத்துள்ளது.

Share this post with your friends