வசந்த பாலன் இயக்கத்தில் இருந்து ஒரு படம் வருகிறது என்றாலே அதில் நிச்சயம் ஒரு கலைநயம் மற்றும் மக்களின் வாழ்வியல் அல்லது ஒரு புதிய அம்சம் நிறைந்த ஒன்றாக இருக்கும்.

அண்மையில் இவர் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்த திரைப்படம் “ஜெயில்”. குப்பத்தில் வாழும் இளைஞர்கள் எவ்வாறு போதை பொருட்கள் பயன்பாட்டால் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்கிற செய்தியை பதிவு செய்து இருப்பார். இந்த படம் பல நல்ல விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது.

தற்பொழுது, அர்ஜுன் தாஸ் லீட் ரோலில் உருவாகி உள்ள படம் தான் “அநீதி”. ஜி வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் வகை படமாக இப்படம் உருவாகி உள்ளது. நேற்று இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசந்த பாலன் கலை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்பலாம்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

லிங்க்: https://youtu.be/DamKA1aUxlM