வசந்த பாலன், ஜி வி. பிரகாஷ் குமார், நா.முத்துக்குமார் கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களின் இதயங்களை எப்போதுமே கொள்ளை கொண்டுள்ளன.
கவிஞர் நா.முத்துக்குமார் மறைவுக்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்ப பலரும் முயன்று வருகின்றனர். பல புதிய பாடலாசிரியர்கள் அனைவருக்கும் இவரின் பாடல்கள் ஒரு அகராதி என்றால் அது மிகையாகாது.
மீண்டும் அந்த தருணத்தை கொண்டு வர நினைத்த வசந்த பாலன் ஜி வி இருவரும் நா.முத்துக்குமார் கவிதையை பாடலாக மாற்றுவது என முடிவு செய்து தேர்வு செய்தது தான் “திகட்ட திகட்ட காதலிப்போம்” அவரின் கவிதை தொகுப்பில் இருந்து.
ஜி வி பிரகாஷ் குமார், யாமினி கண்டசாலா ஆகியோர் குரல்களில் இப்பாடல் அனைவரது இதயத்தையும் கவர்ந்து தற்போது இணைய வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாடல் லிங்க் : https://youtu.be/7YVS-jwalik