Mnadu News

வசிஷ்ட நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.

வசிஷ்ட நதியின் குறுக்கே இருந்த பழமையான பாலத்தை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் 12 கோடி ரூபாயில் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் தரைப்பாலம் பணி தாமதமானது. அதோடு, பாலம் புதுப்பிக்கும் பணி ஆரம்பித்ததும் தரைப்பாலம் அமைத்த ஒப்பந்ததாரர் தரமற்ற பாலத்தை போட்டதுடன் இரவில் செல்வதற்கான விளக்கும் அமைக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பாலத்திற்கு மறுபுறம் உள்ள 7 ஆவது வார்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.இந்நிலையில், நேற்று இரவு ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழை காரணமாக வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Share this post with your friends