சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தன. இந்த முறை பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வராத ஒரு புதிய தீபாவளியாக அமைந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இரண்டு படங்களும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தன. ஆனாலும், பிரின்ஸ் படத்தை காட்டிலும் சர்தார் படத்துக்கு வரவேற்பு அதிகமாவே இருந்தன ரசிகர்களிடம்.

இரு படங்களும் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் சர்தார் படத்தின் வசூல் 50 கோடிகளையும், பிரின்ஸ் திரைப்படம் 27 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. ஏற்கனவே, சர்தார் திரைப்படத்தை ஆஹா ஒடிடி தளமும், தனியார் தொலைக்காட்சியும் ஒரு குறிப்பிட்ட பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது.

சில புதிய படங்கள் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ளதால் சர்தார் படம் எளிதாக 100 கோடிகளை வசூல் செய்யும் என திரை அரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.