Mnadu News

வசூலை அள்ளும் ஜெயிலர்! பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்த சூப்பர் ஸ்டார்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 3500 க்கும் அதிகமான திரையரங்குகளிலும், தமிழகத்தை பொறுத்தவரை 900 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் வெளியானது.

மேலும் பன்மொழி சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் ஆகியோர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து உள்ளனர். இவர்களோடு ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு,ரெடின் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகி தற்போது வெளியாக நல்ல வரவேறப்பை பெற்று உள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படத்துக்கு நினைத்த அளவை விட ரீச் அதிகமாக கிடைத்துள்ளது.

இந்நிலையில், முதல் நாளில் இந்தப்படம் 100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்குகள் நிரம்பி வழிகின்றன.  ‘ஜெயிலர்’ படம் மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்நாளில் தமிழகத்தில் 29.46 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 12.04 கோடியையையும், கர்நாடகத்தில் 11.92 கோடியும், கேரளத்தில், 5.38 கோடியும், வெளிநாடுகளில் 32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் 95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு தமிழ் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவது இதுவே முதல் முறை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Share this post with your friends