தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்றது.பின்னர், வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மோக்கா புயலாக வலுப்பெற்றுள்ளது.தொடர்ந்து, அதிதீவிர புயலாக தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு – வட கிழக்கு திசையில் நகர்ந்து சற்று வலுவிழந்து தென்கிழக்கு மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி திட்டவட்டம்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்...
Read More