நடிகர் வடிவேலு லீட் ரோலில் நடித்து வரும் படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஆல்பம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்த இசைஞ்சர் சந்தோஷ் நாராயணன், இந்த படத்தில் பாடகர் வடிவேலு நிறைய பாடல்களை பாடி உள்ளார் என்றும், விரைவில் பாடல்கள் வெளியாகும் என கூறி இருந்தார்.
திங்க் இசை நிறுவனம் இசை உரிமையை கைபற்றி உள்ள நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இன் “அப்பதா” பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என நேற்று படக்குழு படக்குழு அப்டேட் வெளியிட்டது. பிரபு தேவா மாஸ்டர் நடனத்தில், விவேக் வரிகளில், வடிவேலு இப்பாடலை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.