வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் உயர்ந்த வண்ணமே உள்ளன. கடந்த சில வாரங்களாகவே சுமார் 12 ஏவுகணைகள் ஏவி அனைத்து உலக நாடுகளையும் கிலியடைய வைத்துள்ளது. நேற்று தென்கொரியாவின் எல்லைக்கு அருகே கடலில் பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்துள்ளது தென் கொரியாவை இன்னும் கொதிப்படைய வைத்துள்ளது.
இந்நிலையில், பதற்றத்தை தணிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரிலும் நூற்றுக்கும் அதிகமான பீரங்கிகளை ஏவி தாக்குதலை தீவிரம் ஆக்கியுள்ளது. இதுகுறித்து தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில் “வட கொரியா தமது ஏவுகணை சோதனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.