தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி, சில நாட்களாக, போலி வீடியோ பரவி வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர், டிஜிபி ஆகியோரும் ஆலோசித்து, தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என கூறினர். இவ்வாறு போலியாக வீடியோ செய்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரப்பிய, ஹிந்தி பத்திரிக்கை ஆசிரியர் தெய்னிக் பாஸ்கர், பத்திரிக்கை உரிமையாளர் தன்வீர் மற்றும் பிரசாந்த் உமராவ் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.விரைவில், இவர்கள் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைத்தளங்கில் செய்தி அல்லது வீடியோ பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய நபர்களை பிடிக்க டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்முவில் விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு.
விமான கடத்தல் போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழலில், ஒன்றிணைந்து விமான நிலைய...
Read More