Mnadu News

வரகு அடை பிரட்டல்

தேவையான பொருட்கள்

வரகு அரிசி                                      : 1 கப்

கடலை பருப்பு                               : ½ கப்

பாசிப்பருப்பு                                 : ½ கப்

வரமிளகாய்                                    : 4

சீரகம்                                                : 1 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல்                    : 4 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்                            : 2

இஞ்சி                                                   : சிறு துண்டு

தயிர்                                                    : 1 கப்

பெ. வெங்காயம்                           : 1

கடுகு                                                 : தேவையான அளவு

கருவேப்பிலை                               : தேவையான அளவு

 

சமைக்கலாம் வாங்க:

வரகு அரிசியையும், பருப்பையும் தனியாக நான்கு மணிநேரமும் ஊற வைத்து, வர மிளகாய், சீரகம் சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை தோசைக்கல்லில் அடையாக ஊற்றி பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துக் கொள்ளவும். ஊற்றிய அடையை சிறு சிறு துண்டுகளாக ஆக்கிக் அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலுடன் பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலையைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி என்ணெய் காய்ந்தவுடன் கடுகு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துள்ள அடைத்துண்டுகளை கடாயில் கொட்டி நன்றாக கிளற வேண்டும். சிறுது நேரம் கழித்து அரைத்து வைத்த தேங்காய்க் கலவை விழுதுகளை சேர்த்து பச்சை வாசம் போகும்வரை கிண்டவும். கடைசியாக தயிரைச் சேர்த்து கடாயை இறக்கிவிடலாம்.

வரகு அடையை ஒரு கப் அல்லது பவுலில் எடுத்து அதன் மீது அழகுக்காக சில கொத்தமல்லி இழைகளை மேலாக தூவி, பரிமாறுங்கள்.

 

மருத்துவப் பலன் அறிக:

வரகு அரிசி:

சிறுதானியங்களில் தனித்துவம் பெற்றதாக வரகு இருந்து வருகிறது.  தற்போதைய சூழலில் அதிகமாக பயன்படுத்தும் அரிசி கோதுமையை விட வரகு சிறந்ததாக வரகரிசி காணப்படுகிறது. உடல் எடையை குறைக்கப்பயன்படுகிறது. மாதவிடாயில் பிரச்சினையுடைய பெண்கள் வரகைச் சமைத்து உண்டுவர தீர்வு கிடைக்கும். உடலில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டு வலியால் அவதிப்படுவர் வரகை நாடுவது நல்லது.

சத்துக்கள்</st

Share this post with your friends