ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள மத்திய உள்ளதுறை அமைச்சர் அமித்ஷா , பைலட் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து, தர்ணாவில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு குறைவாக உள்ளது. கெலாட்டின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலில் 25 இடங்களிலும் மீண்டும் பா.ஜ.க வெற்றி பெறும். மோடி அரசின் செயல்பாடு, கட்சி சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜ.க, தேர்தலை சந்திக்கும்.அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கங்களில் ஒன்றாகும். மக்கள் சோர்ந்து போயுள்ளனர். ராகுல் யாத்திரை மேற்கொண்ட போதிலும், சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டபப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. என்று பேசி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More