Mnadu News

வருகிறான் “கலகத் தலைவன்” !

தடம், தடையறத் தாக்க, மீகாமன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தமது இடத்தை பதிவு செய்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இயக்குநர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மனிதன், நிமிர், கண்ணே கலைமானே படங்கள் வரிசையில் தற்போது அவர் நடித்து வரும் படம் தான் மாமன்னன். இந்த படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படம் தான்
“கலகத் தலைவன்”.

உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் இணைந்து நடித்துள்ளனர். ஶ்ரீகாந்த் தேவா இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். நேற்று வெளியான படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் & ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லிங்க் : https://youtu.be/-uhhxh_6SCk

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More