Mnadu News

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575 சதவிகிதம்; சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றின் அடிப்படையில்; இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட ஆறு பேருக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this post with your friends