அதிமுக சார்பில் வழங்கிய தங்கக் கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ. வங்கியில் இருந்து எடுத்துச் சென்று தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும். அதோடு; தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட பின் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கவசத்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கக் கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அதோடு;. இந்த ஆண்டுக்கு மட்டுமே உத்தரவு வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More