Mnadu News

வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு!

கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை குறைக்கப்பட்ட வர்த்தக சிலிண்டர்களின் விலையானது மீண்டும் ஆறாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கடும் உயர்வை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends