நாடு முழுவதிலும் வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராகவும், கட்டுப்படுத்தும் விதமாகவும் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்குரைஞர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்யும் விதமாக நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி மற்றும் 2 மூத்த நீதிபதிகள், ஒரு வழக்குரைஞர் ஆகியோர் உள்ளடக்கிய குறை தீர்க்கும் குழுவை அனைத்து உயர்நீதிமன்றங்களும் அமைக்க வேண்டும். இது அவர்களின் பிரச்னைகளை தீர்க்க ஏதுவாக இருக்கும். இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More