கோவை மாவட்டத்தை சேர்ந்த ஷர்மிளா பானு என்பவர் குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் ஷர்மிளா பானு உட்பட பரத், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.அதேபோல ஆரோவில் பகுதியில் விபச்சாரம் நடத்திய தமிழ்ச்செல்வன், சிதம்பர கனி, கார்த்தி, வேளாங்கண்ணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். திண்டிவனம் மற்றும் ஆரோவில் பகுதியில் விபச்சாரம் நடத்திய பெண் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More