கடந்த 25 ஆம் தேதிஇந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற முடியாத நிலை ஏற்பட்டது.
வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுட்டுரை, முகநூல் போன்ற பிற சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தது. வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், தரவுகள் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்றும், வாட்ஸ்ஆப் அழைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் குவிந்தது.
வாட்ஸ்ஆப் நிறுவன தரவுகளின்படி, மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னௌ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அதிக அளவாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு வாட்ஸ்ஆப் சேவை முடங்கியதற்கான காரணத்தை தெரிவிக்க வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More