Mnadu News

வாரத்தில் 4 நாள்கள் வேலை :100 நிறுவனங்கள் அறிவிப்பு.

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களான ஆட்டோம் வங்கி, உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஏவின் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. அந்த நிறுவனங்களில் தலா 450 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
முதல்கட்டமாக 100 நிறுவனங்கள் 4 நாள்கள், பணிநாள்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன் 2,600 ஊழியர்களின் பணி நாள்கள் 4 நாள்களாக குறைய வாய்ப்புள்ளது. ஊழியர்களின் பணிநாள்கள் குறைக்கப்படுவதால், ஊழியர்களின் பணிபுரியும் திறன் அதிகரித்து, நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிக்கும் என நம்புவதாக பெருநிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதால், சில மணி நேரங்களின் வித்தியாசத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்க நேருவதாகவும், ஊழியர்களைத் தக்கவைக்க இது சிறந்த முறை என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Share this post with your friends