பண்டிகைகள் என்றாலே வெறும் இனிப்புகளோடு நின்று விடாமல் பிரபல நடிகர்களின் படங்களும் கூடவே சேர்ந்து தீபாவளி, பொங்கல் போன்ற தமிழர் பண்டிகைகளை இன்னும் அழகாக்கும்.
அதே போல பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பல வருடங்களுக்கு பிறகு தல தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகம் கடலில் நீந்த வைத்துள்ளது.
ஆம், ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு படமும், வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாளில் திரைக்கு வர உள்ளது உறுதி ஆகி உள்ளது. இதற்கான பணிகளை இரண்டு படக்குழுவும் செய்து வருகின்றனர்.