“வாரிசு” படத்தின் ஷூட்டிங் துவங்கிய நாள் முதல் படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது தற்போது வரை.
ஷூட்டிங் முழுதும் முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில், தீபாவளி பண்டிகையின் போது படத்தின் செகண்ட் லூக் வெளியிட்டு படக்குழு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் இன்று காலை வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமன் இசையில் இன்று மாலை 6.30 மணிக்கு வாரிசு படத்தின் முதல் சிங்கிள் புரோமோ வெளியாகும் என
வெளியிட்டு வாரிசு ஃபீவரை உள்ளமெங்கும் பற்ற வைத்துள்ளது.