வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா,பிரகாஷ்ராஜ், ஷ்யாம், சரத்குமார், ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “வாரிசு”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியானது. என்ன தான் சர்ச்சைகளை இந்த பாடல் சந்தித்தாலும் தொடர்ந்து யூடியூப் இல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
இப்படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பொங்கலுக்கு இப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்கு இரண்டு மெகா ஸ்டார்கள் படங்கள் வருவதால் அதாவது பால கிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் படங்கள் வருவதால் “வாரிசுடூ” படத்துக்கு நிறைய ஸ்கிரீன்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகை சமயங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே அங்கு முக்கியதுவம் தரப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது. விரைவில் ஒரு தீர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.